திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனி ஆதார் அட்டை கட்டாயம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக் கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளியால் ஆன ஆபரணங்கள், பணம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.
மேலும், ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற தினங்களில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இதற்கான டிக்கெட் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை, திருமலையில் உள்ள விஜயா வங்கி மூலம், கோவில் நிர்வாகம் விநியோகித்து வந்தது. இந்நிலையில் தற்போது அங்கப்பிரதட்சணம் செய்யவதற்கான டிக்கெட் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அங்கப்பிரதட்சணம் டிக்கெட் வாங்க வருபவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து சீட்டினை வாங்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment