Thursday 14 June 2018

SRI:

*திருவாய் மொழியில் நாராயண சப்த பிரயோகங்கள்*


வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே -1-3-3-

ஓன்று எனப் பல வென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் -1-3-7-

நாரணனைக் கண்டக்கால் --மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே  -1-4-5-

நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே -1-10-8-

தோற்றோம் மட நெஞ்சே எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -நாரணனாலே -2-7-1-

நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் 2-7-2-

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ - 4-1-1-

நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே உன் ஆகமுற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே  -4-3-3-

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே -4-3-6-

நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் -4-4-2-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் -4-4-4-

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் -4-4-7-

ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தீ நாராயணா என்று என்று காலம்தோறும் யான் இருந்து கைத்தலை பூசலிட்டால் -4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி -4-9-11-

மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானும் அன்று உய்யக் கிளிண்டது நாராயணன் அருளே  -4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை -குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள் -5-8-11-

தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்--நம்பெருமான் நாராயணன் நாமங்களே -5-9-10-

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ -7-5-2-

மால் அரி கேசவன் நாரணன் சி மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலமிட்டு என்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் -8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் - திருக் கடித்தானாமே -8-6-10-

ஓராயிரம் உலகு ஏழு அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின காள நன் மேனியினன் நாராயணன் நங்கள் பிரான் அவனே -9-3-1-

நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -10-5-1-

நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே -10-5-2-

பாட்டாய பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே -10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி  -10-6-3

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே  -10-9-1-

நாரணன் தமரைக் கண்டு உகந்து -எங்கும் தொழுதனர் உலகே -10-9-2-



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment