Tuesday, 10 April 2018

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்! - DHANISHTA PANCHAMI (BLEMISH IN DEATH)

SRI:

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்!

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.

• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.

அது என்ன அடைப்பு? – அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ”இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் ” என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து  கொள்ளவேண்டும்.
DHANISHTA PANCHAMI (BLEMISH IN DEATH)
STARDOSHA PERIOD
AVITTAM, SATHAYAM, POORATTATHI, UTHRATTATHI, REVATHI6 MONTHS
ROHINI4 MONTHS
KRITHIKAI, UTHAM3 MONTHS
PUNARPUSAM, VISAHAM, UTHRADAM2 MONTHS
  1. If death has occurred on the above said stars, then dosha (blemish) is formed due to those stars. Hence close the house until the blemish period is over. Eg: if somebody dies on the Nakshatra Rohini, then close the house or the room for 4 months. Otherwise, it affects the happiness of the family members.
  2. Even if the death has occurred outside the house, the house where the dead person lived should be closed
If the house could not be closed, pour some sesame oil or gingili oil in a bronze bowl and place it in the place where the dead person spent his life in the house and donate it to the needy person.

72 Devine sentences given by Sri Baghawad Ramanujacharyar as per Prapannamrutham

SRI:

72 Devine sentences given by Sri Baghawad Ramanujacharyar as per Prapannamrutham

பிரபன்னாம்ருதம் படி ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த - 72 வார்த்தைகள்

1. ஆசார்யர் திருவடி பணிந்து போவது போல்
அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம் நடக்க வேண்டும்.

2. சம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில்  நம்பிக்கை வேணும்.

3. புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும்.

4. மதசார்பற்ற ஞானம் அறிவுடன் போதும் என்று இராமல் இருக்க வேண்டும்.

5. பகவத் சரித்ரங்கள் சேஷ்டிதங்கள்  வாக்யங்களில் உகந்த ஈடுபாடுடன் இருக்க வேண்டும்.

6. ஆசார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு, மீண்டும் புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும்.

7. அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.

8. சந்தனம் மலர் நறு மணம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்க கூடாது.

9. கைங்கர்யபரர் திருநாமங்களை  உபயோக்கிக்கும் பொழுது அவன் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது அடையும் இன்பம் அடைய வேண்டும்.

10. அடியார் அடியானே, அவனை ( ஸ்ரீ பாதத்தை) அவன் அடியானை விட சீக்கிரம் அடைகிறான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும்.

11. ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ இன்றி அழிவான்

12. வைஷ்ணவர் வாழ்வு முறை அவனை அடையும் உபாயம் என்று கருத கூடாது

13. அவன் ஒருவனே அடையும் குறிக்கோள்.

14. கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது.

15. ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல் இருக்க கூடாது. 

16. பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும் ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது.

17. திரு கோவிலை நோக்கியோ, ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ, கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ, காலை நீட்ட கூடாது.

*18. காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும்*

19. பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி பார்த்ததும் த்வயம்  மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு சேவிக்கவும்.

20. திருநாம சந்கீர்தனத்தின் நடுவிலோ கைங்கர்ய பரர்களை பாராட்டும் பொழுதோ நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும், நடுவில் கூட்டத்தில் இருந்து போவது
மிக பெரிய பாவமாகும்.

21. உன்னை தேடி ஸ்ரீ வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே
சென்று வர வேற்க வேண்டும், அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட செல்ல வேண்டும்  இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்.

22. அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள  வேண்டும், அவர்கள்
திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து அவர்களை உனக்கு முன் மரியாதையாக நடத்த வேண்டும்.

23. திருகோவிலையோ, 
திருகோபுரத்தையோ, 
திருவிமானத்தையோ கண்டால் கை கூப்பி வணங்க வேண்டும்.

24. மறந்தும் புறம் தொழாமல், அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும் காணாமல் இருக்க வேண்டும்.

25. மற்றை தெய்வ செஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும் ஈர்க்க கூடாதவை.

26. அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ, அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு
இருக்கும் பொழுதோ நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது.

27. ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது.

28. நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும்.

29. நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும்.

30. ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால் அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது, அப்படி நடத்தினால் மிக பெரிய பாபம் வரும்.

31. ஸ்ரீவைஷ்ணவர் உன்னை  முதலில் வணங்கி அடியேன் என்றால் அவருக்கு அவமரியாதை காட்ட கூடாது, அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும்.

32. ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள் சோம்பல்தனம், தூங்கி வழிவது, தாழ்ந்த பிறவி -போன்றவை அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்து கொள்ள வேண்டும். அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும்.

33. பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில் சுவீகரித்து கொள்ள கூடாது.

34. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் சுவீகரித்து கொள்ள கூடாது.

35. ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும்.

36. கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும்.

37. அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்.

38. பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.

39. அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல் நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும்.

40. நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது.

41. அப்படி பட்டவர்கள் வீட்டில் பெருமாளை  சேவிக்க கூடாது.

42. ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும்
பெருமாள் பிரசாதம் ச்வீகரிக்காமல் இருக்க கூடாது.

43. விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால்
மறுக்க கூடாது.

44. பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம், பாபங்களை போக்கும்
மறுக்க கூடாது வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும்

45. ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது.

46. மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது.

47. அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செய்யவும் எல்லா
பொழுதும் போக வேண்டும்.

*48. நித்யம் ஒரு மணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும்*

49. திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும்.

50. தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம்.

51. வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது.

52. பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது.

53. மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும்.

54. அவன் அடியாரை களங்க படுத்தும், ஆச்சர்யர்களை இகழும், புலி தோல் போத்திய மானிடரை மதிக்க கூடாது.

55. த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும்.

56. உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும்.

57. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும்.

58. ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல்லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும்.

59. ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல், அவர்களை
பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும்.

60. பரம பத கைங்கர்யம் ஆசைபட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு
பாடு பட வேண்டும்

61. சரணாகதன் 
கைங்கர்யபரர் விதிக்கும் கட்டளை படிக்கு மாறாக தனக்கு நன்மையே பயத்தாலும் நடக்க  கூடாது.

62. பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ, பெருமாளுக்கு சாத்தாத
சந்தனமோ, வெத்தலையோ புஷ்பமோ பானகமோ சுவீகரித்து கொள்ள கூடாது.

63. ஐச்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து
கொள்ள கூடாது.

64. நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே
ச்வீகரிகலாம்.

65. சாஸ்திரம் விதித்த ஒன்றையே பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும், கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது.

66. சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும்.

67. பெருமாள் பிரசாதம், புஷ்பம், புனிதம் என்ற உணர்வுடன் சுவீகரிக்க வேண்டும், போக பொருளாக கொள்ள கூடாது

68. சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும்.

69. ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால் பேறு  இழப்பு நிச்சயம்,
அவர்கள் அனுக்ரகத்தால் பேறு  சீக்கிரம் நிச்சயம் பெறுவோம்.

*70. அடியார், அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள  வேண்டும்*
அவர்கள் மனம் கோணும் படி நடந்தால் நாம் கைங்கர்யத்தை இழப்போம்.

*71. திவ்ய திருமேனியை வெறும் கல் என்றோ, ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ, பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ, புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ  திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ  பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று எண்ணுபவனோ அகல பாதாள இருட்டு நரகம் புகுவான்*

72. ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம், பெருமாளை  திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே நிச்சயம் பேறு பெறுவான். *ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிகாதவனை விட அதிக பாபம் செய்தவன் ஆகிறான்.* ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது,
இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும்

உடையவர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Alawar , Acharyas and birthplace

SRI:

Alawar , Acharyas and birthplace

Poigai Alwar - Kanchipuram

Boothattalwar - Thirukkadalmalli [Mahabalipuram]

Peyalwar - Mylapore, Chennai

Thirumazhisai Alwar - Thirumazhisai

Nammalwar - Alwar Tirunagari

Madurakavi Alwar - Thirukkolur

Kulasekara Alwar - Thiruvanjikkalam, Kerala [yet to be visited]

Perialwar - Srivilliputtur

Sri Andal - Srivilliputtur

Tondaradipodi Alwar - Thirumandangudi

Thiruppan Alwar - Nisulapuri or Woraiyur

Thirumangai Alwar - Thirukkuraiyalur

Birth places of Acharyas, with approximate year of birth:

Swami Nathamuni - Kattumannar koil - 823

Uyyakkondar -Thiruvellarai - 886

Manakkal Nambi - Manakkal - 929

Alavandar - Kattumannar koil - 976

Periya Nambi -Srirangam - 997

Thirukkoshtiyur Nambi - Thirukkoshtiyur - 987

Thirumalai Andan - Azhagar koil - 988

Alwar Tiruvaranga Perumal Araiyar [s/o Alavandar] - 1017

Thirukkacchi Nambi - Poovirundavalli [Poonamalle] - 1009

Swami Ramanuja - Sriperumbudur - 1017

Koorattalwan - Kooram - 1010

Mudaliyandan - Pettai - 1027

Embar aka Govinda Perumal - Maduramangalam - 1021

Engalazhvan - Thiruvellarai - 1097

Parasara Bhatta [s/o Koorattalwan] - Srirangam - 1122

Nanjeer - Tirunarayanapuram - 1113

Nampillai [Varadacharya, author of Eedu] - 1147

Periyavacchan Pillai - Chenganur - 1167 to 1262

Vadakku Thiruveedhi Pillai - 1167

Pillai Lokacharya [s/o Vadakku Thiruveedhi Pillai] - 1205

Azhagiya Manvala Perumal Nayanar [s/o Vadakku Thiruveedhi Pillai] - 1207

Thiruvaimozhi Pillai - Kuntinagaram - 1290

Swami Manavala Mamunigal - Azhvar Tirunagari - 1371

Nadathur Ammal aka Vatsya Varadacharya -

Kidambi Appullar -

Swami Vedanta Desika [nephew of Kidambi Appullar] - Thoopul - 1268

முன் ஜென்ம வாசனை!

SRI:

முன் ஜென்ம வாசனை!

ஒரு காவல்காரன், வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்று
கத்திக்கொண்டே போவான்....ராஜா கால வழக்கம்.

ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லி சென்று விட்டான்....அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த_பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...

இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு "ஜாக்கிரதை" சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றார்....

அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தார்.

''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ..... அவனுக்கு கொடும் தண்டனையை கொடுத்து விடுவாரோ?''என்று காவல் காரன் நடுங்கினான்.....

ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்? எதற்காக?

முதல் நாள் இரவு பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....

அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை மயக்கியது.
அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

#ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

(1) “மாதா நாஸ்தி பிதா நாஸ்தி 
நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை, காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை,
இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.

(2) “ஜன்மதுக்கம் ஜராதுக்கம் 
ஜாயாதுக்கம் புந;புந: 
சம்ஸார ஸாகரதுக்கம் 
தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும்
துன்பங்கள் மனத்தை மயக்கி இந்த சம்சாரக் கடலில் தள்ளி விடும், வாழ்வே சோகம், மாயம்,ஆகையால் விழித்துக்கொள் ஜாக்ரதை....

(3) “காம; குரோதஸ்ச லோபஸ்ச 
தேஹே திஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய 
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் உன் உடம்பினுள்ளேயே குடியிருக்கும் கொள்ளைக்காரர்களப்பா1....உனதுள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

(4) “ஆசாயா பத்யதே லோகே : 
கர்மணா பஹு சிந்தயா: 
ஆயுக்ஷீணம் ந ஜாநாதி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

ஆசையெல்லாம் தோசை தான் மனிதா, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமாக கொண்டு அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிக்காதே, இதனால் உனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை நீ அறிய மாட்டாய். விழித்துக் கொள்ளவேண்டாமா?

(5) ஸம்பத: ஸ்வப்ன சங்காஷ: 
யவ்வனம் குசுமோபம்!
வித்ய்த்சாஞ்சலம் ஆயுஷ்யம், 
தஸ்மாத் ஜாக்ரதா! ஜாக்ரதா!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் போலத்தானடா! , இளமை வயதோ நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறியும் பூவைப் போல உதிர்ந்து விடும். மின்னல் போல தோன்றீ மறையும் இந்த வாழ்க்கை, ஆகையால் விழித்துக் கொள்.

ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

SRI:

ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

நன்றி: 108 திவ்யதேசம்

ஐயங்கார் என்பவர் வைணவத்தின் அடையாளமான பஞ்ச சம்ஸ்காரத்தைத் தரித்துக் கொண்டவர்ஆவார். .

சம்ஸ்காரம் என்பது ஐந்து நெறிகளை உள்ளடக்கிய ஒன்றாகும்

அவை

தாபசம்ஸ்காரம்:-

வலதுதோளில்  சக்கரமும்
இடதுதோளில்  சங்கும் 
தரித்து செய்யப்படுவதாகும்இதை தாப சம்ஸ்காரம் என்பர்.

புண்ட்ரசம்ஸ்காரம்:-

நெற்றிநாபிமார்புகழுத்துஇரண்டுதோள்கள்பிடரிபின்இடுப்பு 
ஆகிய உடலின் பாகங்களில் 

கேசவநாராயணாமாதவகோவிந்தவிஷ்ணுமதுசூதனதிரிவிக்கிரம
வாமனஸ்ரீதரரிஷிகேசபத்மநாபதாமோதர 
திருநாமங்களைத் தியானித்து திருமண் காப்பு அணிதல்!
இதை புண்ட்ர சம்ஸ்காரம் என்பர்.

நாமசம்ஸ்காரம்:-

கோத்திரம்சூத்திரம் 
முதலிய சரீரம் சம்பந்தமான சிறப்புகளை விடுத்து அடியேன் என்னும் பெயரை ஏற்றல்இதை நாமசம்ஸ்காரம் என்பர்.

மந்திரசம்ஸ்காரம்:-

நல் மந்திரங்களை உபதேசித்தல்இதை மந்திர சம்ஸ்காரம் என்பர்.

யாகசம்ஸ்காரம்:-

வழிபாட்டு மூர்த்தியை அமைத்து திருவாராதனம் செய்தல்இதை யாக சம்ஸ்காரம் என்பர்.

இந்த ஐந்தும் பெற்றவரே ஸ்ரீவைணவ நெறிகளுக்கு உரிய அதிகாரி ஆவார்

அங்கத்தில் இந்த ஐந்தும் தரித்தவரையே ஐயங்கார் என்பர்

அய்யங்கார் என்பது சாதியல்லஅது வைணவத்தின் அடையாளம் ஆகும்.